குளவி கொட்டு ; 15 பேர் பாதிப்பு

75 0

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதால் 15 பேர் புதன்கிழமை (18) அன்று பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ கெக்கரஸ்ட்வோல்ட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே,  இவ்வாறு குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 8 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.