பேருந்தில் பாலியல்சேஷ்டை: இராணுவ சிப்பாய் கைது

65 0

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்  பாலியல் சேஷ்டை புரிந்த நிலையில்,குறித்த சிப்பாயை முருங்கன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம்   புதன்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது.

அந்த மாணவி மடு பகுதியில் இருந்து   அரச பேருந்தில் பாடசாலைக்கு  பயணித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த  பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் குறித்த மாணவிக்கு பாலியல் சேஷ்டை புரிந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவி முருங்கன்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் முருங்கன் பொலிஸார் இராணுவ சிப்பாயை  கைது செய்துள்ளனர்.  மேலதிக விசாரணைகளை  முருங்கன் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.