ஒருகொடவத்தையில் தீ விபத்து

66 0

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் குளிரூட்டி பழுதுபார்க்கும் நிறுவனத்தில் எரிவாயு கசிவின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பரவிய தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவல் காரணமாக அந்த நிறுவனம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.