
தம்புள்ளை பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்கத் தவறிய கட்சி உறுப்பினர்கள் குழுவை இடைநீக்கம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ குழுவினதும் செயற்குழுவினதும் தீர்மானங்களுக்கு ஏற்ப தம்புள்ளை பிரதேச சபையில் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நியமிக்கும் நடவடிக்கையில் உரியவாறு நடந்து கொள்ளாத உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சுசில் ஹேரத், அனில் இந்திரஜித் தசநாயக்க, சம்பத் கரந்கொல்ல, குமார ரத்நாயக்க, குசுமா குமாரி மற்றும் தில்ருக்ஷி பிரேசந்திர ஆகியோரை இவ்வாறு கட்சியிலிருந்து நீக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

