யாழ்ப்பாணத்தில் ஹெரோயின், ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து, ஒரு கிராம் ஐஸ் மற்றும் 50 கிராம் ஹெரோயின், 05 கிராம் கஞ்சா , 04 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை , சுன்னாகம் பொலிஸ் பிரிவில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியை , நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

