கொழும்பு, களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை இடம் பெற்றுள்ளது.
களுபோவில டெம்பிள் வீதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
பண கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

