“உபஹார மஞ்சரி” நூல் சமர்ப்பண விழாவில் பிரதமர் பங்கேற்பு

72 0

சிரேஷ்ட பேராசிரியர் தேசமான்ய ஜே.பி. திசாநாயக்கவை கௌரவிக்கும் வகையில் “உபஹார மஞ்சரி” நூல் சமர்ப்பண விழா வெள்ளிக்கிழமை (13)  கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலைக்கூடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பேராசிரியர் ஜே. பி. திசாநாயக்க  இந்த நாட்டில் உயர்கல்வித் துறையில் தோன்றிய பல பேராசிரியர்களில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக மதிக்கப்படுவதற்கு, அவரது கல்விச் சேவை பல்கலைக்கழகத்திற்கு மட்டுமன்றி, அதையும் தாண்டி சாதாரண மக்களையும் சென்றடைந்தமையேயாகும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜே.பி. திசாநாயக்கவின் விரிவான இலக்கியப் பணி, நவீன மொழியியல், சிங்கள இலக்கணம், சிங்கள கலாசார ஆய்வுகள் மட்டுமல்லாமல், சிறுவர் இலக்கியத் துறையிலும் ஆராய்ச்சி செய்து புத்தகங்களைத் தொகுத்து வழங்கிய  இலக்கியப் பணி ஈடு இணையற்றது.

சிறுவர்களின் சிங்கள அறிவையும் சிந்தனையையும் வளர்க்க பெறுமதியான பாடப்புத்தகங்களை எழுதுவதன் மூலம் கிராமியக் கதைகள் மற்றும் இதிகாசக்கதைகளை சிறுவர்களின் உலகத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவரப்பட்ட விதம் அற்புதமானது.

சிங்கள மொழியின் கலைத் தன்மையைப் பாதுகாத்து, அதை முழு மக்களுக்கும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்காக, சிங்கள எழுத்துக்களிலிருந்து இலக்கணம் வரை புதிய கருத்துக்களைக் கொண்டு வந்து, எமது நாடு ஒரு அழகான மொழிக்கு உரிமை கோரும் கீர்த்திமிக்க நாடாக உலகில் பிரகாசிக்க முடியும்.

இந்த மண்ணில் பிறந்த மக்களுக்கு, நாம் ஒரு அழகான மொழி மற்றும் கலாசாரத்தைக் கொண்ட மக்கள் என்பதைத் தெரிவிப்பதில் ஜே.பி. திசாநாயக்க ஆற்றிய மகத்தான பணிக்கு மிகவும் நன்றி.

இந்தப் பாராட்டு நூலை சமர்ப்பணம் செய்யும் விழாவில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிங்கள கற்கைகள் துறைத் தலைவர் சங்கைக்குரிய அகலகட சிறிசுமண தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக உட்பட பல விசேட அதிதிகள் கலந்து கொண்டனர்.