திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

64 0

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கம்பஹா – கிரிபத்கொடை நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்  கொழும்பு – பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் களுத்துறையில் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 12 ஆம் திகதி  491,967 ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.