அம்பாறை – அக்கரைப்பற்று வீதியில் விபத்து ; வயோதிபர் பலி!

108 0

அம்பாறை – அக்கரைப்பற்று வீதியில் வெள்ளிக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனமொன்று சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது சைக்கிளில் பயணித்த வயோதிபர் காயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அம்பாறை, சேனாநாயக்கபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய வயோதிபர் ஆவார்.

விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அம்பாறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.