தியாகி திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் நல்லூர் பிரதேச சபை தவிசாளர்

64 0

நல்லூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள ப. மயூரன், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி ஆசிர்வாதம் பெற்றார்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வெள்ளிக்கிழமை (13) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்போது, மயூரன் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, நல்லூர் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று, தியாக தீபத்தின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தியதுடன், ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார்.