நன்பேரியல் பகுதி ஊடாக பேக்கர்ஸ் வளைவை நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


