இன்றைய தினம் மதியம் யேர்மனியின் அதிபர் மாளிகையான Schloss Bellevue முன் தமிழின அழிப்பு கண்காட்சி.

264 0

கடுமையான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருந்த போதும் – Schloss Bellevue முன் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை புகைப்படக் கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

இன்றைய தினம் மதியம் யேர்மனியின் அதிபர் மாளிகையான Schloss Bellevue முன், இலங்கையின் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கவின் அதிகாரப்பூர்வ வருகைக்கு எதிராக தமிழின அழிப்பு கண்காட்சி நடாத்தப்பட்டது.

இராஜதந்திர அரசியல் நிகழ்வும், இராணுவ அணிவகுப்பும் காரணமாக யேர்மன் காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிகளையும் விதித்தது. இருந்த போதும், எங்களது இனப்படுகொலை புகைப்படக் கண்காட்சி, பேச்சுகள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நடத்தப்பட்டன.

அவருக்கு சிவப்புக் கம்பளத்துடன், ராணுவ மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டபோது, எங்களது வாக்கினால் உலகத்திற்கு உண்மையைக் கூறினோம்:
அவர் சமாதானத்தின் பிரதிநிதி அல்ல. 2009ம் ஆண்டு இடம்பெற்ற தமிழர் இனப்படுகொலையிலும் இன்றும் தொடரும் தமிழர் ஒடுக்குமுறையிலும் அவருக்கு பொறுப்புண்டு.

கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதும், பலர் நின்று பார்த்தனர், கேள்விகள் எழுப்பினர்,தமது ஆதரவை எமக்கு தெரிவித்தனர். பிரச்சார துண்டுப்பிரசுரங்கள் தமிழ் இளையோர்களால் வழங்கப்பட்டன, புகைப்படங்கள் காட்டப்பட்டன.

எங்களது கோசம் தெளிவானது:
இனப்படுகொலையாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் இல்லை!
தமிழர் அடக்குமுறை முடிவடைந்தது என உலகம் நம்பும் பொய் தொடராது! இனப்படுகொலையாளியை வெளியேற்று என யேர்மன் மொழியில் உரைகளும் கோசங்களும் எழுப்பப்பட்டன.