சுவிஸ் ரயில் நிலையங்களில் ரயில் மறியல்: ரயில் சேவை பாதிப்பு

76 0

சுவிஸ் ரயில் நிலையங்கள் சிலவற்றில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நேற்று மாலை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

ரயில் நிலையங்களில் ரயில் மறியல்

நேற்று மாலை 6.00 மணியளவில், பாலஸ்தீன ஆதரவு அமைப்பினர் 300க்கும் அதிகமானோர் ஜெனீவா ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டார்கள்.

 

சமூக ஊடகங்களில் செய்திகள் பரவ, சிறிது நேரத்தில் ஏராளமானோர் ரயில் நிலையத்தில் திரண்டுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, லோசான் ரயில் நிலையத்திலும் மறியலில் ஈடுப்பட்டுள்ளார்கள் பாலஸ்தீன ஆதரவு அமைப்பினர்.

இந்த மறியல்களால் நேற்று மாலை வெகுநேரத்துக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.