மொரட்டுமுல்லை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

9 0

மொரட்டுமுல்லை பொலிஸ் பிரிவில் கட்டுபெத்த பகுதியில், இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது நேற்று திங்கட்கிழமை (9) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட வேளையில், சந்தேக நபரிடமிருந்து 30.75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.