உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

8 0

பிபில பொலிஸ் பிரிவில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (9) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடகம, பிபில பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.