நாடளாவிய ரீதியில் பொசன் தினத்தை முன்னிட்டு 19,000 தானசாலைகள் பதிவு

127 0

பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 19,185 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) ஆலோசகர் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்தார்.

இந்த தானசாலைகளின் பொது சுகாதாரத் தரங்களைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொசன் தினத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு மற்றும் பானங்களை  தானசாலைகள ஊடாக வழங்குவது  இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க ஒரு பாரம்பரியமாகும் என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட  தானசாலைகள் பின்வருமாறு,

கொழும்பு – 944

கம்பஹா – 1,792

களுத்துறை – 977

கண்டி – 1,264

மாத்தளை – 812

நுவரெலியா – 352

காலி – 1,186

மாத்தறை – 1,021

அம்பாந்தோட்டை – 533

யாழ்ப்பாணம் – 3

கிளிநொச்சி – 3

முல்லைத்தீவு – 17

வவுனியா – 21

மன்னார் – 2

மட்டக்களப்பு – 9

அம்பாறை – 584

கல்முனை – 14

திருகோணமலை – 152

குருநாகல் – 2,114

புத்தளம் – 731

அனுராதபுரம் – 2,301

பொலன்னறுவை – 650

பதுளை – 968

மொனராகலை – 716

இரத்னபுரி – 1,097

கேகாலை – 922

இந்த இடங்களில் உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கழிவு முகாமைத்துவம் ஆகியவற்றில் விசேட  கவனம் செலுத்தப்படும் எனவும், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள பொசன்  கொண்டாட்டத்தை உறுதி செய்வதாகவும் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.