குறுகிய காலத்துக்குள் அரசாங்கம் மீதான மக்களின் எதிர்பார்ப்பு சிதைவடைந்துள்ளது

79 0

நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். இந்த காலப்பகுதியில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் ஒருசில செயற்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பான உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமத்ரி தர்ம மகா சங்க சபையின்  நாயக்கர்  பேராசிரியர்  கொடபிடியே ராஹூல தேரர் தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துக்கொண்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாரம்பரியமான அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியடைந்த நிலையில் தான் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள்.

குறுகிய காலத்துக்குள் மக்களின் எதிர்பார்ப்பு  பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. மக்களின் எதிர்பார்ப்பு, அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.