மன்னார் நடுக்குடா பகுதியில் வைத்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1314 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலைகளுடன் நான்கு சந்தேக நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து சவர்க்காரம், கஜு உள்ளிட்ட பொருட்களுடன் இரு டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதான நால்வரும் கல்பிட்டியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் நால்வரையும் மன்னார் மதுவரித் திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

