ரிரிஎன் – தமிழ்த்தேசியத் தொலைக்காட்சியின் ஊரகப்பேரொளி கிராமிய நடனப்போட்டி-2025.

58 0

பிரான்சில் ரிரிஎன் தொலைக்காட்சி 6 வது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2025 கடந்த 01.06.2025 ஞாயிற்றுக்கிழமை ஒல்னே சு புவா பகுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. பிரதம விருந்தினர், நடுவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் இன்னியம் இசையுடன் அழைத்து வரப்பட்டனர்.

வரவேற்பு விளக்கினை பிரான்சு ரிரிஎன் இணைப்பாளர் திரு. ஜெயா, பிரான்சு கிளையின் செயற்பாட்டாளர் திருவாட்டி சுபா மோகன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டது தொடர்ந்து விழா மேடையில் அனைத்துலகப் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. றங்கன், தமிழர் ஒருங்கிணைப்பு குழு- பிரான்சு சார்பாக திரு பாலசுந்தரம், ரிரிஎன் சார்பாக திரு. ரூபன், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திரு. பாலகுமாரன், தமிழ்ச்சோலை தலைமைச் செயலகம் மற்றும் ஒன்லே சுபுவா சங்கத் தலைவருமான திரு.விசுவநாதன், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் திருவாட்டி ஜனனி, பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் சார்பில் செல்வி சோபி, அரசியல் துறைப் பொறுப்பாளர் செல்வி நிதுசா, மூத்தகலைஞர் திரு பரா, அனைத்துலக தமிழர் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு.முகிலன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து நடுவர்களின் அறிமுகம் இடம்பெற்றது. ஆடற்கலைச் செல்வி திருவாட்டி ஜொசிட்டா ஹெரால்ட், முதுகலைமானி கலாநிதி திருவாட்டி ஞானசுந்தரி வாசன், நாட்டியக் கலை மணி திருவாட்டி மீனாம்பிகை வசீகரன், பிரதம நடுவர் முன்னாள் விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம் தி்ரு ஆதவன் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான மதிப்பளித்தலை ரிரிஎன் தமிழ்ஒளி நிர்வாக பொறுப்பாளர் திரு. சோதிராசா அவர்கள் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் திருவாட்டி ஜனனி, அரசியல் துறைப் பொறுப்பாளர் செல்வி நிருஷா, நிர்வாக உறுப்பினர் நிலானி ஆகியோர் செய்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வரவேற்புரையை திருவாட்டி முகிலன் சர்மிலா நிகழ்த்தினார். ஊரகப்பேரொளி பாடல் திரையில் ஒளி பரப்பப்பட்டது. தொடர்ந்து வரவேற்பு நடனத்தை திரான்சி தமிழ்ச்சோலை மாணவிகள் வழங்கியிருந்தனர். ஒன்லிசுபுவா நகரசபை உதவி நகரபிதா மற்றும் நகரசபை உறுப்பினர்களை திரு விசுவநாதன் அவர்கள மதிப்பளிபபுச் செய்துவைத்தார்.

பின்பு அறிமுக உரையை ரிரிஎன் ஆரம்ப கால உறுப்பினர் திரு. கணேஷ் தம்பையா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து கீழ் பிரிவிற்கானப் போட்டி ஆரம்பமாகியது. இதில் 16 குழுக்கள் பங்குபற்றி சிறப்பித்தனர். இடைவேளைக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு றங்கன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து நடுவண் பிரிவிற்கானப் போட்டிகள் ஆரம்பமாகின. இதில் 7 குழுக்கள் பங்குபற்றி சிறப்பித்தனர்.
அடுத்ததாக மேற்பிரிவுப் போட்டிகள் ஆரம்பித்தன. இதில் 5 குழுக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தொடர்ச்சியாக நடுவர்கள், பயிற்றுநர்கள் மதிப்பளிக்கப்பட்டார்கள்.
மேலும் பிரதம நடுவர் திரு ஆதவன் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ரிரிஎன் பிரான்சு இணைப்பாளர் திரு ஜெயா அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.
மேலும் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப் பட்டார்கள். வெற்றி பெற்ற குழுவினர்களுக்கு விருதுகள் கொடுத்து மதிப்பளிக்கப்பட்டனர். மேற்பிரிவில் முதல் இடம்பெற்ற குழுவின் பயிற்றுனர் செல்வி கஜானி அவர்களுக்கு ஊரகப்பேரொளி வெற்றியாரம் விருதும் தங்க நாணயமும் திரு. றங்கன் அவர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுகண்டது.

போட்டி முடிவுகள்:

கீழ்ப்பிரிவு

1ம் இடம் : Noisy le sec தமிழ்ச்சோலை – ஒயிலாட்டம்
ஆசிரியர் திருவாட்டி ஜெனிசிராணி டயான்

2ம் இடம் : Drancy தமிழ்ச்சோலை – ஒயிலாட்டம்
ஆசிரியர் திருவாட்டி றோணி செல்வராஜ்

3ம் இடம் : Noisy le sec தமிழ்ச்சோலை – கோலாட்டம்
ஆசிரியர் திருவாட்டி ஜெனிசிராணி டயான்

நடுவண் பிரிவு

1ம் இடம் : Chelles தமிழ்ச்சோலை – சுளகு நடனம்
ஆசிரியர் திருவாட்டி வினோதா செந்தூரன்

2ம் இடம் : Sevran தமிழ்ச்சோலை – வேப்பிலை நடனம்
ஆசிரியர் திருவாட்டி தனுஷா மகேந்திரராஜா

3ம் இடம் : Noisy le grand தமிழ்ச்சோலை – வேப்பிலை நடனம்
ஆசிரியர் திருவாட்டி வினோதா செந்தூரன்

மேற்பிரிவு

2ம் இடம் : Versailles தமிழ்ச்சோலை – கரகாட்டம்
ஆசிரியர் திருவாட்டி டெஸ்மினி டார்வின்

3ம் இடம் : விருட்சம் கலைப்பள்ளி – மீனவ நடனம்
ஆசிரியர் திருவாட்டி சிந்து நிசான்

ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2025

ஆசிரியர் செல்வி கஜானி கணேசலிங்கம்
Aulnay sous bois 2 தமிழ்ச்சோலை – சிலம்பாட்டம்.