யாழில் விபத்து ; இருவர் படுகாயம்

167 0

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் சனிக்கிழமை (07)  இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுக்காயமடைந்துள்ளனர்.

துவிச்சக்கர வண்டியில் வந்த இருவர் மீது  வாகனம் ஒன்று  மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.