அமெரிக்காவுடனான வர்த்தகப்போர் தீவிரமடைந்தால்… ஜேர்மன் பொருளாதாரத்துக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு

94 0

அமெரிக்காவுடனான வர்த்தகப்போர் தீவிரமடைந்தால் ஜேர்மனியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என ஜேர்மனியின் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தகப்போர் தீவிரமடைந்தால்…

ட்ரம்பின் வரிவிதிப்புகள் ஜூலை முதல் முழுவீச்சில் அமுல்படுத்தப்பட்டு, அதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் பதிலடி கொடுக்குமானால், ஜேர்மன் பொருளாதாரம் இந்த ஆண்டு 0.5 சதவிகிதமும், அடுத்த ஆண்டு 0.2 சதவிகிதமும் வீழ்ச்சியடையும் என ஜேர்மனியின் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

 

என்றாலும், 2027இல் நாடு பொருளாதார வளர்ச்சிக்குத் திரும்பும் என்றும் ஜேர்மனியின் மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விடயம் என்னவென்றால், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் நேற்று அமெரிக்கா சென்று அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை சந்தித்துத் திரும்பியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப்போர் தீவிரமடைந்தால்... ஜேர்மன் பொருளாதாரத்துக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு | Germany May Economic Recession If Us Trade War

இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக அமைந்ததாகவே செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக, ஜேர்மனி மீதான வரிவிதிப்பில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா, அதனால் ஜேர்மன் பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏதேனும் நடக்குமா என்பதையெல்லாம் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.