ரஸ்யாவின் அதநவீன போர் விமானங்களை உக்ரைன் தாக்கியழித்தமைக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே ரஸ்யா இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ரஷ்யா குரூஸ் ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்தியது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகரையும் உக்ரைனின் மேற்குகில் உள்ள நகரமொன்றையும்,வடமேற்கில் உள்ள நகரங்களையும் ரஸ்யா தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பயங்கரவாத தாக்குதல்களிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள உக்ரைனின் இராணுவஇலக்குகள் தாக்கப்பட்டன என தெரிவித்துள்ளது.
மிகவும்துல்லியமாக தாக்ககூடிய நீண்டதூர செல்லும் வான் தலை கடல் ஆயுதங்களை பயன்படுத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

