முஜாஹிதீன் பிரிகேட்ஸ் கிபுட்ஸ் நிர் ஒஸ் மீது தாக்குதலை மேற்கொண்டவேளை இவர்கள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவின் தெற்கில் உள்ள கான்யூனிசில் மீட்கப்பட்ட உடல்களை தடயவியல் பரிசோதனைக்காக இஸ்ரேலிற்கு கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாசின் பிடியில் தற்போது 56 பணயக்கைதிகளே உள்ளனர் இவர்களில் 20 பேர் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் கருதுகின்றது.
சபிக்கப்பட்ட சனிக்கிழமையன்று காலையில் நடப்பதற்காக வெளியே சென்ற இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை என சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

