நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
இருப்பினும், இது ஒரு தொற்றுநோய் நிலைமை அல்ல என்று அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (04) இரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கருத்து வௌியிடுகையில், இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

