ஜனாதிபதி அலுவலகத்துக்கான உள்ளக விவகாரப் பிரிவு திறப்பு

110 0

ஜனாதிபதி அலுவலகத்தில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலக வளாகத்துக்குள் நிறுவப்பட்ட உள்ளக அலுவல்கள் பிரிவு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (04) திறந்துவைக்கப்பட்டது.

உள்ளக விவகாரப் பிரிவு ஜனாதிபதி அலுவலகம் கொழும்பு 01  என்ற முகவரி அல்லது 0112354495 என்ற தொலைபேசி எண் மூலம்  அல்லது 0716402654 வட்ஸ்அப் எண் மூலம் அல்லது iau@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் முறைப்பாடுகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.