தாய்லாந்தில் உணவு தேடி பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்தது யானை

72 0

தாய்லாந்தில் உணவுதேடிவந்த யானை பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து அங்கிருந்த உணவுப்பொருட்களை உண்பதை காண்பிக்கும் படங்கள்  வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் பல்பொருள் அங்காடியொன்றிற்குள் நுழைந்த யானை அங்கிருந்த உணவுபொருட்களை உண்ட பின்னர் அங்கிருந்து வெளியேறமுடியாமல் திணறுவதை வெளியாகியுள்ள படங்கள் காண்பித்துள்ளன.

சுமார் நான்கு டன் எடையுள்ள ஆண் யானை தாய்லாந்தின் வடகிழக்கு நகரமான நகோன் ராட்சசிமாவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றிற்குள் நுழைந்து  கேக் முட்டைகள் போன்றவற்றை உண்பதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

பிலாய் பியாங் லெக் என்ற அந்த 25 யானை பின்னர் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்குண்டதையும் சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

எனினும் அதிஸ்டவசமாக அந்த கடையின் உரிமையை அதனை அங்கிருந்து வெளியே கொண்டு சென்றுள்ளார்.

அவன் இனிப்புகள் கேக் மற்றும் முட்டைகளை சாப்பிட்ட பின்னர் இங்கிருந்து சென்றான் என தெரிவித்துள்ள உரிமையாளர் அவன் இனிப்பு பொருட்களை உண்டது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் அந்த யானையை பாதுகாப்பாக காட்டிற்குள் விரட்டியுள்ளனர்.

யானைகள் அவற்றின் அதீத பசிக்கு பெயர் பெற்றவை.யானை ஒரு நாளைக்கு 150 கிலோ உணவை உண்ணவேண்டும் என சர்வதேச வனவிலங்கு கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

இது 375 டின் வேகவைத்த பீன்சிற்கு சமம்.

காட்டுயானைகள் மனித உணவின் மீது அதீதமான ஆசையை வளர்த்துக்கொண்டுள்ள என தாய்லாந்தில் உள்ள  இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டில் கிடைக்கும் இலைகளிற்கு வீடுகளிலும் வாகனங்களிலும் சிற்றூண்டிகளை தேடுவதை விரும்புகின்றன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.