பிலியந்தலையில் மர ஆலையில் தீ விபத்து

73 0

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மர ஆலை ஒன்றில் இன்று புதன்கிழமை (04) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த மர ஆலை பிலியந்தலை – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளது.

தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பல தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் உதவியைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.