நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபை சைவ சமய விவகாரக் குழுவினால் வெளியிடப்படும் “நல்லைக்குமரன்” 33ஆவது மலருக்கான ஆக்கங்கள் தற்போது கோரப்படுகிறது.
யாழ். மாநகர சபை சைவ சமய விவகாரக் குழுவின் 2025ஆம் ஆண்டுக்கான “நல்லைக்குமரன்” மலருக்கான ஆக்கங்களை அனுப்பும்போது பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளும்படி, யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரும் சைவ சமய விவகார குழுத் தலைவருமான ச.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.
அதன்படி கட்டுரைகள் 5 – 7 பக்கங்களுக்குள் அமைய வேண்டும்.
கட்டுரைகளை அனுப்புவதற்கான முடிவுத் திகதி இம்மாதம் 25ஆம் திகதியாகும். முடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கும் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஆக்கங்களை nallaikumaran2025@gmail.com எனும் மின்னஞ்சல் அல்லது இறுவட்டுக்கள் மூலம் அனுப்புவது அவசியமாகும். மென் பிரதியாக அனுப்பப்படாத ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும், கட்டுரையாளரின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டியது மிக அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

