ஜேர்மனியில் மருத்துவமனை ஒன்றில் தீ: நோயாளி கைது

118 0

ஜேர்மனியில், மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக 72 வயது நோயாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் மருத்துவமனை ஒன்றில் தீ

நேற்று நள்ளிரவு வாக்கில் ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரிலுள்ள Marien மருத்துவமனையில் தீப்பற்றியது.

 

உடனடியாக கட்டிடத்தை கரும்புகை சூழ, தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர்.

என்றாலும், மூன்று நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர், 34 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஜேர்மனியில் மருத்துவமனை ஒன்றில் தீ: நோயாளி கைது | Hamburg Hospital Fire Incident Patient Arrested

மருத்துவமனையின் முதியோர் நலப் பிரிவில் தீ துவங்கிய நிலையில், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 72 வயது நபர் ஒருவர் தீவைத்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.