யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய துணை தூதரக அதிகாரியின் மகன் மரணம்

83 0

யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிக்சை பிரபாகரன் அக்ஷயும் சிகிச்சைகள் பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி ஒமந்தையில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

ஏற்கனவே இந்த விபத்தில் யாழ்.இந்தியதுணைத்தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான ச.பிரபாகரன் உயிரிழநதிருந்தார்.

அவருடைய மனைவியாரான பிரபாகரன் சீதாலச்சுமி மற்றும் மாமனார் ஆகியோர் தொடாந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.