எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லையென இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மே மாதம் நிலவிய விலையே ஜூன் மாதமும் காணப்படுமென இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 274 ரூபாவாகவும் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 325 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 178 ரூபாவாகவும்
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 341 ரூபாவாகவும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 293 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

