களுத்துறை மாவட்டத்தில் அங்குருவாதொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவ்வெடல்வத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் அங்குருவாதொட்ட பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அங்குருவாதொட்ட பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் களுத்துறை – நேபட பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 52 லீற்றர் 500 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

