நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை (29) இரவு 8 மணி முதல் வெள்ளிக்கிழமை (30) இரவு 8 மணி வரை மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு 50,009 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றிலை் 14,031 முறைப்பாடுகள் தொடர்பில் சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்திலும் மேல் மாகாணத்திலும் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை, மின்தடைகள் குறித்து 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது CEBCare என்ற கையடக்கத்தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

