போதைப்பொருளுடன் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி கைது

108 0

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் ஹெரோயின், ஐஸ் மற்றும், புகையிலை ஆகிய போதைப்பொருட்களுடன் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமன காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் வியாழக்கிழமை (28) கடமையில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் சிறைச்சாலைகள் அவசர நிலமைகளை கையாளும் படையணி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான அதிகாரியின் பாதனிகளினுள் மறைத்து வைத்திருந்த நிலையில் ஒரு தொகை ஹெரோயின், ஐஸ் மற்றும் புகையிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான அதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.