புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அடக்குமுறைகளுக்கு பயன்படுத்தப்படாது

99 0

புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டம் இனவாதம் மதவாம் அல்லது வேறு விடயம் ஒன்றை  காரணமாக்கிக்கொண்டு அடக்குமுறைக்கு பயன்படுத்துவதற்கு தயாரிப்பதில்லை. நாட்டை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால் இவ்வாறான  சட்டம் ஒன்று அவசியமாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு (தற்காலிக விதி முறைகள்) சட்டத்தை இரத்துச்செய்து புதிய  சட்டம் ஒன்றை வரைவதற்கு ஏற்புடையதாக பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதன் கீழ், பல்வேறு அமைப்புகள் மற்றும் 240 பேர் இணைந்து  தயாரித்து கைச்சாத்திட்டுள்ள யோசனைகள் அடங்கிய பிரேரணை ஒன்று நீதி மற்றும் தேசிய ஒரிமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வியாழக்கிழமை (29) நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

பயங்கரவாத தடுப்புச்  சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு  கடந்த அரசாங்கத்தினால் பல குழுக்ககளை நியமித்துக்கொண்டு முன்னுக்கு சென்றாலும்  சட்ட ஒன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பில் அரசாங்கத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்த  குழுவுக்கு கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொடுக்குமாறு  நாங்கள் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை பொது மக்களுக்கு விடுத்திருந்தோம்.

உங்களால் வழங்கப்படும் யோசனைகளை சாதகமாக நாங்கள் ஏற்றுக்கொண்டு குறித்த குழுவுக்கு  சமர்ப்பிப்போம். நாங்கள் மக்களுக்கு நல்லமுறையில் செவிசாய்க்கும் அரசாங்கமாகும். அதிகாரததுக்கு  வருவதற்காக நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவ்வாறே நிறைவேற்றுவோம். புதிய சட்டம் ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் கருத்துக்கள் மற்றும்  யோசனைகளை பெற்றுக்கொண்டு அறிக்கை ஒன்று தயாரிப்போம். அதுதொடர்பாகவும் கருத்துக்களை பெற்றுக்கொள்கிறோம்.

இனவாதம் மதவாம் அல்லது வேறு விடயம் ஒன்றை  காரணமாக்கிக்கொண்டு அடக்குமுறைக்கு மயன்படுத்துவதற்கு இந்த சட்டத்தை தயாரிப்பதில்லை. உலகளாவிய பயங்கரவாத சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு இவ்வாநான சட்டம் ஒன்று தேவையாகும்.

உலகில் வேறு நாடுகளில் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு  சட்டம் இருக்கிறது.அந்த சட்டங்கள்  மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றவகையில், அந்த நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. நாட்டை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால் இவ்வாறான  சட்டம் ஒன்று இருக்க வேண்டும் என்றார்.