முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் உதவிகள் வழங்கி வைப்பு

93 0

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கத்தினதும், மக்களினதும் “மனிதாபிமான உதவிகள்” வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (28) மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட மீனவர்கள் முப்பது பேருக்கும், அதேநேரம் முல்லைத்தீவு மாவட்ட சமாசங்களின் சங்கத்தினருக்கும் கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் குளிர்சாதனப்பெட்டிகள் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கடற்றொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.