காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

117 0

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது எதிர்வரும்  (31.05.2025) அன்று காலை 9 மணிக்கு மாங்குளம் நகரில் நடைபெற உள்ளது.

எதிர்வரும் (31) ஆம் திகதி அன்று 3007 ஆவது நாளாக தங்களுடைய உறவுகளுக்கான நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்தநிலையில், குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வருகை தந்து ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.