கொழும்பு மாவட்டம் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.
ஒருகொடவத்தை சந்தியிலிருந்து ஆமர் வீதி பாபர் சந்தி நோக்கிப் பயணித்த பாரஊர்தி ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

