திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

84 0

பதுளை மாவட்டம் எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 45 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்ற சந்தேக நபரை கைதுசெய்ய எல்ல பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் கடந்த 03ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டு சம்பவம் குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும் சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.

இதனால், சிசிரிவி கமராவில் பதிவாகிய காணொளியில் இருந்த சந்தேக நபரின் புகைப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் எல்ல பொலிஸ் நிலையத்தின்  071 – 8591524 அல்லது 057 – 2228522 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.