அநுராதபுரத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

68 0

அநுராதபுரம் – நெலுங்குளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (27)  அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து  15 கிராம் 200 மில்லி நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்டப்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் 34 வயதுடைய அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.