சுற்றுலாப்பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பிரான்ஸ் முன்வைத்துள்ள திட்டம்

100 0

தங்கள் வருவாய்க்கு சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் உலக நாடுகள் பல உண்டு. ஆனால், சுற்றுலாப்பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது பிரான்ஸ் அரசு.

ஆம், பிரான்சிலுள்ள அருங்காட்சியகங்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளல்லாத பிற நாடுகளிலிருந்து சுற்றுலா வருவோருக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன.

அதற்கான அதிகாரத்தை அருங்காட்சியகங்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வழங்கியுள்ளார்.

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து, Louvre அருங்காட்சியகம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளல்லாத மற்ற நாடுகளிலிருந்து வருவோருக்கு அதிக கட்டணம் விதிக்க இருப்பதாக மேக்ரான் அறிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, பிரான்சிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளல்லாத மற்ற நாடுகளிலிருந்து வருவோருக்கான கட்டணங்களை 2026ஆம் ஆண்டிலிருந்து அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.