குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

74 0
டுபாயில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி பயண ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க, இன்று (27) தெரண நியூஸ் Big Focus நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்ததாவது, இந்த குற்றவாளிக்கு பயண ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் முன்னர் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் மீதான விசாரணைகளின் போது இந்த விடயம் அம்பலமானதாகக் கூறினார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் கெஹல்பத்தர பத்மே முக்கிய சந்தேக நபராகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்