சுற்றுலாப் பயணியை தாக்கிய விவகாரம் – பிரதி அமைச்சர் வௌியிட்ட தகவல்

81 0

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பதிவிடுவதன் மூலம் சில குழுக்கள் சுற்றுலாத் துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகம் மற்றும் சுயாதீன குழுக்களின் ஆதரவுடன் உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.