பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான்.அமிர்தசரஸ் சேஹர்தா பகுதியில் குருத்வாரா அருகே பொதுவிழா ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அதன்பின், அங்குள்ள சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த அவரை அங்குள்ளோர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் ஏற்கனவே ஹர்ஜிந்தர் சிங் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நபர்கள் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

