பதுளையில் ஜெனெரேட்டரை திருடிய நால்வர் கைது

79 0

பதுளை – கந்தகெட்டிய, பல்லேவெல பகுதியில்  சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான ஜெனெரேட்டரை திருடி லொறியில் கொண்டு சென்ற நால்வர் சனிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தலாவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 31, 34, 44 மற்றும் 24 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மின்சார உற்பத்திக்காக நிறுவப்பட்ட ஜெனெரேட்டர்  திருடப்பட்டு லொறியில் கொண்டு செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.