நீர் கட்டண அதிகரிப்பு குறித்து கலந்துரையாடவில்லை – அமைச்சர் அநுர கருணாதிலக்க

116 0

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதும் அதற்கு நிகராக நீர் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில்  எந்த  கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான தேவை ஏற்பாடாதென நம்புகிறோம்  என்று  நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அணுர கருணாதிலக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23)  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நீர் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் முன்வைத்த கூற்றொன்றுக்கு  பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் மின்சார கட்டணத்தை 33 சதவீதம்  குறைப்பதாக மக்களுக்கு வாக்களித்திருந்தது. ஆனால் தற்போது நூற்றுக்கு  18 சதவீதம் மின  கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது போன்று  அதற்கு நிகராக குடிநீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து  வருவதாக அறியக்கிடைக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டு்கு அமைவாகவா இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது என கேட்கிறேன்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை  எழுப்பி, விடயத்துக்கு  பொறுப்பான அமைச்சர்  அணுர கருணாதிலக்க குறிப்பிடுகையில், மின்  கட்டண அதிகரிப்புக்கு  நிகராக குடி நீர் கட்டணம் அதிகரிக்கப்பட இருப்பதாக தெரிந்துகொள்ள கிடைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். அவர் இந்த தகவலை எந்த மூலாதாரத்தின் அடிப்படையில் தெரிந்துகொண்டாரென கேட்கிறேன்.

அதற்கு சஜித் பிரேமதாச பதிலளிக்கையில்,அரசாங்கம் மின் கடட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுத்த  தீர்மானத்தை, அரசாங்கம்  நாட்டு்க்கு அறிவிப்பதற்கு முன்னர் நாங்களே அறிவித்தோம். எங்களுக்கு கிடைத்த  தகவலின் பிரகாரம் நாங்கள் அதனை அறிவித்திருந்திருந்தோம்.

அதேபோன்று தற்போது அரசாங்கம் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு திர்மானித்திருப்பது போன்று, அதற்கு நிகராக  நீர் கட்டணத்தையும் அதிகரிக்கும் என நாங்கள் அனுமாணிக்கிறோம். அதனால் அரசாங்கம்  நீர் கட்டணத்தை அதிகரிக்கப்போகிறதா அல்லது  குறைக்கப்போகிறதா என்றே கேட்கிறேன்.

அதற்கு தொடர்ந்து  பதிலளித்த  அமைச்சர், குடிநீர்  கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில்  அமைச்சு மட்டத்தில் இதுவரை எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரம்  குடிநீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எங்களுக்கு தேவை ஏற்படா தென நம்புகிறோம் என்றார்.