227 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியுள்ளது.
அந்தரத்தில் விமானம் குலுங்கியதால் பயணிகள் அலறியுள்ளனர். விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் அவசரமாக தரையிறங்க பைலட் அனுமதி கேட்ட நிலையில், ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியுள்ளது.
முன்பகுதி சேதமடைந்த விமானம் பாதுகாப்பாக ஸ்ரீநகரை அடைந்த நிலையில் பயணிகள் நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளனர்.

