ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஜயந்த ஜயசூரிய நியமனம்

81 0

அமெரிக்காவின், நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜயந்த ஜயசூரியவுக்கு வெளிவிவகார பிரதி அமைச்சர்  அருண் ஹேமச்சந்திர வாழ்த்துக்களை  தெரிவி்த்துள்ளார்.

அவரின் வாழ்த்துச் செய்தியில்,

நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கு எனது வாழ்த்துக்கள்.

நீதித்துறையில் உங்களின் பரந்த அனுபவமும், அரசியலமைப்பு விடயங்களில் உங்கள் ஆழமான ஈடுபாடும், இந்த முக்கியமான உலகளாவிய பங்கில் இலங்கைக்கு சிறப்பாகச் சேவை செய்யும் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச அரங்கில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.