101 கிலோ போதைப்பொருளுடன் இருவர் கைது

94 0
வீரகெட்டிய பகுதியில் 101 கிலோகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரகெட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வீரகெட்டியவின் அதுபோதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (22) காலை இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, வீட்டினுள் 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.