பிரான்சில், தனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரைக் கொலை செய்த ஒருவர், அவரை கூறுபோட்டு சமைத்ததாக தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பிரான்சிலுள்ள Brasc என்னும் கிராமத்தில், எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளார் Georges Meichler (57)என்பவர்.
2023ஆம் ஆண்டு, ஒரு நாள் திடீரென Georges மாயமாக, அவரது முன்னாள் மனைவி பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
அத்துடன், Georgesஇன் மகளுக்கு அவரது மொபைலிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
நான் பிரிட்டனிக்குச் செல்கிறேன், கொஞ்ச நாள் அங்கு செலவிட்டுவிட்டு திரும்பிவருகிறேன். பிறகு சந்திக்கலாம் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.
ஆனால், தன் தந்தை இப்படியெல்லாம் செய்தி அனுப்புவதில்லை என Georgesஇன் மகளும் கூற, பொலிசார் அவரைத் தேடத்துவங்கியுள்ளனர்.
அப்போது, Georgesஇன் வேனை யாரோ இரண்டு பேர் பயன்படுத்துவதைக் கண்டதாக சிலர் கூற, பொலிசார் அந்த வேனைத் தெடத் துவங்கியுள்ளார்கள்.
அப்போது, பீட்சா தயாரிப்பவர்களான Philippe Schneider (69) மற்றும் அவரது மனைவியான Nathalie Caboubassy (45) ஆகிய இருவர் அந்த வேனை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
வேனை சோதனையிட்ட பொலிசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்தக் காருக்குள் பல பைகளில் மனித உடல் பாகங்களும் இரத்தமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணையில், தான் Georges வீட்டுக்குத் திருடச் சென்றதாகவும், அப்போது தவறுதலாக Georgesஐ கொன்றுவிட்டதாகவும் Philippe கூறியுள்ளார்.
அத்துடன், நான் இப்போது கூறப்போகும் விடயம் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று கூறியுள்ள Philippe, தான் Georgesஇன் உடலை கூறுபோட்டு, அதில் சில துண்டுகளை காய்கறிகளுடன் சேர்த்து சமைத்ததாகவும் கூறியுள்ளார்.
அது, தான் பல ஆண்டுகளுக்கு முன் நேபாளத்தில் கற்ற ஒரு மதச்சடங்கு என்றும் கூறியுள்ளார் Philippe.
Philippeம் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், நாளை மறுநாள், அதாவது, மே மாதம் 22ஆம் திகதி, அவர்களுடைய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

